For more than three decades, Selyn Group has continuously evolved by responding to the realities of the communities connected to its operations. Since its founding in 1991 as a small handloom enterprise, Selyn has grown into a diversified fair-trade business spanning ethical manufacturing, retail, exports, sustainable product innovation, and community development. At the heart of…
கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்:’Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
பெங்கொக்கின் மிகவும் பிரபலமான Soho Hospitality நிறுவனத்திற்குச் சொந்தமான Charcoal Tandoor Fire Grill உணவகம், இலங்கை மக்களுக்காகப் புதியதொரு அனுபவத்தை வழங்கும் நோக்குடன் கொழும்பில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு யூனியன் பிளேஸில் அமைந்துள்ள Capitol Twin Peaks இன் 50வது மாடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த தனித்துவமான உணவகத்தின் நோக்கம், இலங்கையர்களுக்கு உயர்தர உணவு அனுபவத்தை வழங்குவதாகும்.
இலங்கையின் முன்னணி இசை ஜாம்பவான்களான பாத்திய ஜயகொடி, சந்துஷ் வீரமன் மற்றும் மெவன் குணதிலக்க ஆகியோரின் கூட்டு முயற்சியாக கடந்த 23ஆம் திகதி திறக்கப்பட்ட இந்த உணவகம், 600 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்து கொழும்பு நகரின் அழகை ரசித்தபடி உணவருந்தும் வாய்ப்பை இலங்கையர்களுக்கு வழங்குகிறது.
இது வெறும் உணவு அனுபவத்தை வழங்குவது மட்டுமல்லாது, பொழுதுபோக்கு அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு அற்புதமான இடமாகும். Charcoal Tandoor Fire Grill-இன் அழகான உட்புற வடிவமைப்பு, ஒளி அமைப்பு, இசை மற்றும் திறந்த தந்துரி சமையலறை (open tandoor kitchen) ஆகியவை உணவின் சுவைக்கு மேலதிகமாக அதன் அழகையும் ரசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமை முக்கிய சிறப்பம்சமாகும்.
Charcoal Tandoor Fire Grill திறப்பு விழாவானது கொழும்பு வர்த்தக சமூகம், இசைத் துறையின் முன்னணி பிரபலங்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோரின் பங்கேற்புடன் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. அங்கு இந்த உணவு அனுபவத்திற்கே உரிய பிரத்தியேக அம்சங்களை ரசித்தவாறு, இனிய இசையுடன் கொழும்பு நகரின் அழகை அவர்கள் அனுபவிக்க முடிந்தது.
2014 ஆம் ஆண்டு பெங்கொக்கில் ஆரம்பிக்கப்பட்ட Charcoal, அதன் தனித்துவமான இந்திய உணவுகளுக்காகப் புகழ்பெற்றதுடன், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப எந்தவொரு கலாச்சார சமையல் மரபுகளையும் சுவைமிக்கதாக வழங்குவதில் சிறந்து விளங்குகின்றது.
Spice Route எனும் பார்வையை அடிப்படையாகக் கொண்டு கடந்த தசாப்த காலப்பகுதியில் வாடிக்கையாளர்களின் மிகுந்த நம்பிக்கையை வென்றுள்ள Charcoal, இன்று இந்தியாவின் தந்துரி மற்றும் முகலாய (Mughlai) உணவு மரபுகளை சர்வதேசத்திற்குக் கொண்டு சென்று பெங்கொக்கில் இணையற்ற ஒரு உணவகமாக மாறியுள்ளது. live fire techniques மற்றும் மெதுவான சமையல் (slow cooking) போன்ற நவீன முறைகளுடன் கூடிய இந்த உணவுக்கலை, பாரம்பரிய உணவுகளை நவீனத்துவத்துடன் ரசிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த Soho Hospitality இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் நிறுவனருமான ரோஹித் சச்தேவ், “கொழும்பு நகருக்கே உரித்தான அழகான சூழலில் எமது தனித்துவமான அடையாளத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.” என்று குறிப்பிட்டார்.
இதன் இணை உரிமையாளர்களான பாத்திய ஜயகொடி மற்றும் சந்துஷ் வீரமன் கருத்துத் தெரிவிக்கையில், தெளிவான இலக்கு மற்றும் சரியான பார்வையுடன் இந்த ஒத்துழைப்பை ஆரம்பித்ததாகக் கூறினர். “கொழும்பு நகருக்குள் இதுவரை அனுபவித்திராத அதி சொகுசு உணவு அனுபவத்தை ஆரம்பிக்க இதுவே சரியான தருணம் என நாங்கள் நம்புகிறோம்.” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Charcoal Tandoor Fire Grill உணவகத்தின் மற்றொரு இணை உரிமையாளரான மெவன் குணதிலக்க கருத்துத் தெரிவிக்கையில், “கொழும்பு நகரம் ஒரு முன்னணி சுற்றுலாத் தலமாக மாறிவரும் வேளையில், உயர்தரமான மற்றும் தனித்துவமான சமையல் அனுபவங்களை அதிகளவில் அறிமுகப்படுத்தி வருகிறோம். இது கொழும்பு உணவு கலாசாரத்தை இணையற்ற மற்றும் நவீன பாதைக்கு இட்டுச் செல்லும் ஒரு பெரிய படியாகும்.” என்றார்.
Charcoal Tandoor Fire Grill தற்போது கொழும்பு யூனியன் பிளேஸ் Capitol Twin Peaks இன் 50வது மாடியில் உங்களது இரவு உணவு அனுபவத்திற்காகத் தயாராக உள்ளது. உங்களது வாய்ப்பை இன்றே முன்பதிவு செய்ய அவர்களின் இணையதளத்தை அணுகுங்கள்.