இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
சுற்றுலா வேன் விபத்து – 7 பேர் பலி
அமெரிக்காவின் ஐடாஹோ மாகாணம் யல்லோஸ்டோன் தேசிய பூங்கா அருகே நேற்று மாலை சுற்றுலா வேன் சென்றுகொண்டிருந்தது.
அந்த வேனில் 14 சுற்றுலா பயணிகள் பயணித்தனர். நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த கார் மீது வேன் மோதியது. இந்த கோர விபத்தில் வேன் தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில் கார் டிரைவர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.