Homegrown finance company Siyapatha Finance PLC successfully unveiled its 65th branch in Chunnakam, Jaffna, further strengthening the Company’s presence in the Northern region of Sri Lanka. The branch was declared open by Siyapatha Finance PLC Chief Executive Officer (CEO) Mr. Mathisha Hewavitharana, in the presence of Chief Operating Officer (COO) Mr. Rajeev De Silva, Ms.P.Shanmugapriya,…
டிஜிட்டல் கல்வியூடாக இளைஞர் ஆற்றல்களை வெளிக்கொண்டுவரல், தொழில்நுட்பம் மற்றம் Coding ஊடாக அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர்களுக்கு ஊக்கமளித்தல்
-SLT-MOBITEL மற்றும் STEMUP Educational Foundation தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாகவும் கைகோர்ப்பு-
இலங்கையின் மிகவும் நிலையான மற்றும் சமூகத்துடன் இணைந்த ஒரு டிஜிட்டல் கல்வி முயற்சியாக அங்கீகரிக்கப்பட்ட SLT-MOBITEL, ‘Code Club’ திட்டத்தை முன்னெடுப்பதற்காக STEMUP Educational Foundation உடன் மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது ஆறாவது ஆண்டில் கால்பதிக்கும் இந்த வெற்றிகரமான கூட்டிணைவானது, நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கான டிஜிட்டல் எழுத்தறிவு வாய்ப்புகளைத் தொடர்ந்து மாற்றியமைத்து வருகின்றது.
இந்த உடன்படிக்கையில் SLT-MOBITEL பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி ரோஹண எல்லாவல மற்றும் STEMUP Educational Foundation இன் ஸ்தாபகர் பிரபாத் மன்னபெரும ஆகியோர் கைச்சாத்திட்டனர். விஞ்ஞானம், தொழில்னுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியன எதிர்காலத்தின் அடிப்படை என்பதை SLT-MOBITEL புரிந்து கொண்டுள்ளது. இந்தப் பிரிவுகளை ஒன்றிணைத்து Code Club இனால், இலங்கையின் இளைஞர்களுக்கு நம்பிக்கையுடன் முன்னேறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான பதிப்பு, ஏப்ரல் மாதம் வெலிசறயிலுள்ள SLT-MOBITEL Nebula Institute of Technology நிறுவனத்தில் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள 20 பொது நூலகங்களுடன் இணைந்து, இந்த டிஜிட்டல் கற்றல் வாய்ப்பு ஒரே இடத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களிலுள்ள சமூக நூலகங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. புவியியல் ரீதியான தடைகளைத் தாண்டி, அனைத்து மாணவர்களுக்கும் சமமான கற்றல் வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் நோக்குடன் இந்த அணுகல் வட்டம் திட்டமிட்ட முறையில் விரிவாக்கப்படுகின்றது.
மீளமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டமானது கல்வி வாய்ப்புகளைப் பாரியளவில் விரிவுபடுத்துவதுடன், AI, Robotics, மேம்பட்ட டிஜிட்டல் புத்தாக்கக் கருத்துருக்கள் மற்றும் புதிய செயற்திறன்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றது. இவை உலகளாவிய தொழில்நுட்பப் போக்குகளிலும், இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) இலக்குகளிலும் முக்கிய இடத்தைப் பெற்று வருகின்றன. இத்திட்டத்தை நிறைவு செய்யும் மாணவர்கள், தொழில்நுட்ப அறிவை மாத்திரம் பெற்றுக்கொள்ளாமல், புத்தாக்கத்திற்குத் தேவையான சிக்கல்களைத் தீர்க்கும் மனப்பாங்கு (Problem-solving mindset) மற்றும் ஆய்வு ரீதியான தர்க்க அறிவு ஆகியவற்றையும் தமதாக்கிக் கொள்வர்.
இளம் சந்ததியினருக்கு கணினி Coding மட்டும் கற்றுக்கொடுப்பதற்கு அப்பால், அவர்களை ஆக்கபூர்வமாகவும் துணிச்சலாகவும் சிந்திக்கத் தூண்டுவதிலும், தொழில்நுட்பம் சார்ந்த எதிர்காலத்தை நோக்கி இலங்கையை வழிநடத்துவதிலும் இந்த முயற்சி கவனம் செலுத்துகின்றது என்பதை SLT-MOBITEL தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. மேலும், இந்த ஆறு ஆண்டு கால சிறப்பான கூட்டிணைவானது, நாட்டின் எதிர்காலத்திற்கான பொறுப்பை நிறுவனம் எவ்வளவு தூரம் அர்ப்பணிப்புடன் ஏற்றுக்கொள்கிறது என்பதையும் உறுதிப்படுத்துகின்றது.
இந்தக் கூட்டிணைவு ஆரம்பிக்கப்பட்ட கடந்த ஐந்து ஆண்டுகளில், முறையான மற்றும் வழிகாட்டல்கள் நிறைந்த சூழலில் Robotics kits, AI models அல்லது STEM கல்வி முறைமை போன்றவற்றை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்காத நூற்றுக்கணக்கான இளம் மாணவர்களுக்கு ‘Code Club’ வாய்ப்பளிக்க முன்வந்துள்ளது. இவர்களில் பலர் தற்போது தொழில்நுட்பம் சார்ந்த உயர் கல்வித் துறைகளில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர். குறிப்பாக, டிஜிட்டல் வசதிகள் சீராகக் கிடைக்காத பிரதேசங்களில், இந்தத் திட்டமானது ஒரு சமநிலையை உருவாக்கும் சக்தியாக செயற்பட்டு வருகின்றது. இதன் மூலம் எங்குள்ள திறமையான மாணவர்களும் தமக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு இது வழிவகை செய்துள்ளது.
இலங்கையின் தேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் நிறுவனம் எனும் வகையில், அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் கல்வியை மேம்படுத்துவது SLT-MOBITEL இன் பிரதான இலக்காகும். இத்திட்டமானது ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளான (UN SDG) தகுதியான கல்வி (SDG 4), கைத்தொழில், புத்தாக்கம் மற்றும் உட்கட்டமைப்பு (SDG 9) மற்றும் இலக்குகளுக்கான கூட்டிணைவு (SDG 17) ஆகியவற்றுக்கு வலுச்சேர்க்கின்றது. குறிப்பாக, வசதிகள் குறைந்த பாடசாலைச் சமூகங்களில் டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பது தேசிய அபிவிருத்தி இலக்குகளுக்கு மிக அவசியமானது எனும் SLT-MOBITEL இன் நம்பிக்கையை இது உறுதி செய்கின்றது.