தெற்காசியாவின் முதல் “ONE LOVE ரெக்கே இசை நிகழ்வு” 2026 ஆகஸ்ட் 7 முதல் 9 வரை பொந்தோட்டைக் கடற்கரையில் நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் நேற்று அறிவித்தனர். இந்த இசை நிகழ்வில் உலகப் புகழ்பெற்ற 9 ரெக்கே இசைக் கலைஞர்கள் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளனர், இது இப்பிராந்தியத்தில் நடைபெறும் மிகப் பெரிய ரெக்கே கூட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த இசை நிகழ்வு ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும், மேலும் நேரடி இசை, பல்வேறு கலாச்சார…
‘டித்வா’வுக்கு பின் இலங்கை வந்த பயணிகள் கப்பல்
டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பின்னர் சுற்றுலாத் துறையை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில், கொழும்பு துறைமுகத்திற்கு வந்த அதி சொகுசு பயணக் கப்பலான “மெய்ன் ஷிஃப்”இனை அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார்.
900 பேர் கொண்ட குழுவினருடன் TUI குரூஸால் இயக்கப்படும் ஜேர்மன் பயணிகள் கப்பலான “மெய்ன் ஷிஃப்” இன்று (03) 2,700 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கப்பலில் வந்த சுற்றுலாப் பயணிகளில் 1,600 க்கும் மேற்பட்டோர் தீவு முழுவதும் ஒரு நாள் மற்றும் அரை நாள் சுற்றுலாவில் ஈடுபட்டனர்.
காலி, மாது ஓயா, களுத்துறை மற்றும் கொழும்பு போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
Hey, listen up! 234betlogin is your gateway to some decent action. Login is smooth, no glitches that I’ve seen so far. Give them a shot! 234betlogin