Homegrown finance company Siyapatha Finance PLC successfully unveiled its 65th branch in Chunnakam, Jaffna, further strengthening the Company’s presence in the Northern region of Sri Lanka. The branch was declared open by Siyapatha Finance PLC Chief Executive Officer (CEO) Mr. Mathisha Hewavitharana, in the presence of Chief Operating Officer (COO) Mr. Rajeev De Silva, Ms.P.Shanmugapriya,…
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் காணாமல்போன “மஞ்சள் அனகொண்டா” பாம்புக் குட்டி கண்டுபிடிப்பு!
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் காணாமல்போன “மஞ்சள் அனகொண்டா” பாம்புக் குட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டிருந்த “மஞ்சள் அனகொண்டா” பாம்புக் குட்டி ஒன்று காணாமல் போயுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் சிலர் தெஹிவளை பொலிஸில் டிசம்பர் 07 ஆம் திகதி முறைப்பாடு அளித்திருந்தனர்.
சுமார் ஒன்றரை அடி நீளமுடைய இந்த “மஞ்சள் அனகொண்டா” பாம்புக் குட்டி செப்டம்பர் 12 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகரிகளால் கைப்பற்றப்பட்டு தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்ட “மஞ்சள் அனகொண்டா” பாம்புக் குட்டி அண்மையில் மிருகக்காட்சிசாலையில் இருந்து காணாமல்போயுள்ளது.
இது குறித்து மிருகக்காட்சிசாலையின் சேவையாளரிடம் விசாரிக்கையில், “மஞ்சள் அனகொண்டா” பாம்புக் குட்டி வைக்கப்பட்டிருந்த பெட்டியின் கதவு சரியாக மூடப்படவில்லை என்பதால் பாம்பு வெளியே சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மிருகக்காட்சிசாலையின் சேவையாளர்கள் அனைவரும் இணைந்து “மஞ்சள் அனகொண்டா” பாம்புக் குட்டியை தேடிய போதும் அது கண்டுபிடிக்கப்பட்டவில்லை.
இந்நிலையில், நீண்ட நாட்கள் கழித்து தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஊர்வனங்கள் வைக்கப்பட்டுள்ள தோட்டத்தில் வைத்து “மஞ்சள் அனகொண்டா” பாம்புக் குட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Ycel777, decent experience. Deposit and withdrawal process is smooth. Overall, not bad at all. Sana palarin tayo! Check them out: ycel777