இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றிற்கிடையில் 15-வது தடவையாகவும் நடைபெறவுள்ள “Battle of Hindus” கிரிக்கெட் பெருஞ்சமர் போட்டியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்டமான நடைபவணி (Big Match Walk 2026), இன்றைய தினம் (07/03/2026) மிகவும் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் இளையதம்பி இலங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆயிரக்கணக்கானோர்…
நுரைச்சோலையின் மின் பிறப்பாக்கி ஒன்று வழமைக்கு திரும்பியது!
பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் குறித்து, தற்போது கணினியில் சேர்க்கப்படவில்லை எனவும், எதிர்வரும் சில நாட்களில் அது கணினியில் சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் 03 மின் பிறப்பாக்கிகள் மூலம் 900 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்சார கட்டமைப்புக்கு வழங்கிவந்த நிலையில், தற்போது ஒரு மின் பிறப்பாக்கி மட்டுமே தேசிய மின்சார கட்டமைப்புக்கு மின்சாரத்தை வழங்குகிறது.
எனினும், மற்றொரு மின் பிறப்பாக்கி இன்னும் செயலிழந்த நிலையிலேயே உள்ளதாகவும், அதனை இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

