In a significant event for the sustainable tourism sector, a Q&A media session featuring prominent Environment and Development Global Leader Erik Solheim, is set to take place on January 25, 2026. The theme of the discussion is “Achieving Profitability through Sustainable Tourism”. The symposium is hosted by Thema Collections in collaboration with the Sustainable Tourism…
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வட பிராந்தியத்தில் டிஜிட்டலை ஊக்குவிக்கும் வகையில் வணிக பிரமுகர்களைச் சந்தித்து, அவர்களுடனான நட்புறவை வலுப்படுத்தியுள்ளது
வட பிராந்தியத்தில் உள்ள வணிக பிரமுகர்கள் மத்தியில் டிஜிட்டல் புத்தாக்கங்களை ஊக்குவித்து, அவை குறித்த ஆழமான அறிவைப் பகிர்ந்து கொள்ளும் நோக்குடன், அவர்களுடன் பிரத்தியேகமான சந்திப்பொன்றை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி அண்மையில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த சந்திப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள திண்ணை ஹோட்டலில் இடம்பெற்றது. இப்பிராந்தியத்தில் வணிகங்களின் வளர்ச்சிக்கு உதவுவதில் இவ்வங்கி காண்பித்து வரும் அர்ப்பணிப்பில் மற்றுமொரு முக்கியமான நிகழ்வாக இம்முயற்சி அமைந்துள்ளது.
வட பிராந்தியத்தில் தெரிவு செய்யப்பட்ட வணிக பிரமுகர்களும், தொழில் முயற்சியாளர்களும் இந்த பிரத்தியேக நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், அறிவைப் பகிர்ந்து, நட்புறவை வளர்க்கும் ஒரு இனிய மாலைப்பொழுதாக இந்நிகழ்வு மாறியது. வணிகச் செயற்பாடுகளில் டிஜிட்டலை உள்வாங்கிக் கொள்வதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டதுடன், டிஜிட்டல் வங்கிச்சேவை மூலமாக சாத்தியமான தொழிற்பாட்டுத் திறன்கள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புக்கள் குறித்து இதில் பங்குபற்றியவர்களுக்கு நேரடி அனுபவம் கிடைக்கப்பெற்றது.
அனைத்து செயற்பாடுகளும் ஒருங்கே கிடைக்கின்ற, அதிநவீன டிஜிட்டல் வணிக வங்கிச்சேவைத் தீர்வாக வங்கி வழங்கும் Nations Direct Enterprise (NDE) மூலமாக வணிகங்களுக்கு பயனளிக்கும் நிகழ்நேர ஆற்றல்கள், மற்றும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தொழிற்பாடுகள் குறித்து நிகழ்வில் கலந்துகொண்டோர் மத்தியில் செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் வணிக வங்கிச்சேவைக்கான நிறைவேற்று உப தலைவர் அரோஷ லியனாராச்சி அவர்கள் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “டிஜிட்டல் பரிணாம மாற்றம் என்பது வெறுமனே எதிர்காலம் மாத்திரமன்றி, தற்போது நாம் வணிகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் சிக்கல்களைப் போக்கி, அவற்றுக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்து வருவதாக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி நம்புகின்றது. வட பிராந்தியத்திலுள்ள வணிக பிரமுகர்கள் டிஜிட்டல்ரீதியாக இணைக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தில் வளர்ச்சி காண்பதற்கு உதவும் வகையில் தமது வணிகச் செயற்பாடுகளை சீரமைப்பதற்கு இடமளிக்கும் வகையில் நடைமுறைக்கு ஏற்ற, திறன் மிக்க, மற்றும் தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட தீர்வுகளை அவர்களுக்கு வழங்குவது எமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.

ஒவ்வொரு பிராந்தியத்திலும் அவற்றின் நகர்வுகளையும், பரிமாணங்களையும் ஆழமாகப் புரிந்து கொண்டு, அங்குள்ள வணிகங்களுக்கு தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட வங்கிச்சேவை ஆதரவை வழங்க இடமளிக்கும் வகையில், நேருக்கு நேர் சந்திப்பதற்கான தனித்துவமான வாய்ப்புக்களை வழங்கி, இலங்கையின் அனைத்து பிராந்தியங்களிலும் வணிகங்களுக்கு ஆதரவளிப்பதில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி காண்பிக்கும் அர்ப்பணிப்பை இந்த சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையில் பல்வகைப்பட்ட வணிகத் துறைகளில் டிஜிட்டல் ரீதியான வலுவூட்டலை ஊக்குவித்து, நிதியியல் ரீதியான அனைவரையும் அரவணைப்பதில் வங்கியின் பெருந்திட்டத்தின் ஒரு அங்கமாக இம்முயற்சி அமைந்துள்ளது.
பௌதீக ரீதியாகவும், டிஜிட்டல் வழிமுறையிலும் பல்வேறுபட்ட மார்க்கங்கள் மூலமாக வாடிக்கையாளர்களை எட்டி, பல்வகைப்பட்ட தனிநபர், வர்த்தக மற்றும் வணிக வாடிக்கையாளர்களுக்கு தனது சேவைகளை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி வழங்கி வருகிறது. அதிநவீன டிஜிட்டல் வங்கிச்சேவை தொழில்நுட்பங்கள் மூலமாக டிஜிட்டல் வலுவூட்டல் மீது வங்கி கவனம் செலுத்தியுள்ளது.


Your article helped me a lot, is there any more related content? Thanks!