Hayleys Mobility Limited, the mobility arm of Hayleys Fentons Limited, has introduced the all-new JAECOO J5 HEV, broadening its range of high-performance hybrid SUVs to meet the evolving demands of Sri Lanka’s growing new-energy vehicle market. Designed to meet the needs of modern drivers, the JAECOO J5 HEV combines intelligent hybrid performance, advanced safety features,…
பிரீமியம் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுநர்களுக்கு மேலும் நெருக்கமாகக் கொண்டுவருகிறது KTM பேலியகொடை
டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவேட்) லிமிடட் (DPMC) நிறுவனத்தினால் KTM மோட்டார் சைக்கிள்கள் இலங்கையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் இருப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், அதன் புதிய காட்சியறையான ‘KTM Peliyagoda’ அண்மையில் இல. 389, நீர்கொழும்பு வீதி, பேலியகொடை எனும் முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவேட்) லிமிடட் நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான திரு. நாலக மடுகல்ல, வாகன விற்பனைப் பிரிவின் பிரதம அதிகாரி திரு. லக்மால் டி சில்வா, வாகன விற்பனைப் பிரிவின் பிராந்திய முகாமையாளர் திரு. அகில எலபொடகே ஆகியோர் இணைந்து இந்த புதிய முகவர் நிலையத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தனர்.
இந்த புதிய அதிநவீன காட்சியறையானது, மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களுக்கு உலகப் புகழ்பெற்ற KTM வர்த்தகநாமத்தின் உயர் செயல்திறன் கொண்ட Duke 160, Duke 250, Adventure 390 X ஆகிய மாதிரிகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
ஐந்து வருட இடைவெளிக்குப் பின்னர் DPMC நிறுவனம் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் KTM மோட்டார் சைக்கிள்களை இலங்கையில் மீண்டும் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியதுடன், உள்ளூர் ரைடர்கள் உலகின் முன்னணி, உயர் செயல்திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் வர்த்தகநாமங்களில் ஒன்றை மீண்டும் அனுபவிப்பதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவின் முதற்தர பந்தய (Racing) மோட்டார் சைக்கிள் வர்த்தகநாமம் எனும் வகையில் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட KTM, MotoGP, Dakar Rally, Motocross சம்பியன்ஷிப் மற்றும் உலகின் முன்னணி உலகளாவிய பந்தயக் களங்கள் உள்ளிட்ட முதன்மையான சர்வதேச பந்தய அரங்குகளில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. இந்த வர்த்தகநாமம் உலகளாவிய ரீதியில் 80 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தடம் பதித்துள்ள அதேவேளையில், இந்தியா மற்றும் நேபாளம் போன்ற பிராந்திய சந்தைகளிலும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. KTM இன் சிறந்த பந்தய பாரம்பரியம், பொறியியல் மேன்மை மற்றும் பந்தயக் களங்களில் காட்டும் நிலையான
செயல்திறன் ஆகியவை உலகெங்கிலும் உள்ள தொழில்முறை ரைடர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களின் நம்பிக்கையை வென்றுள்ளன.
ஆக்ரோஷமான வடிவமைப்பு, கம்பீரமான தோற்ற வெளிப்பாடு மற்றும் பந்தயக் களங்களின் ஈர்ப்பைக் கொண்ட பொறியியல் நுட்பங்களுக்குப் பெயர் பெற்ற KTM மோட்டார் சைக்கிள்கள், 6 Speed transmission தொகுதிகளுடன் இணைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட திரவ குளிரூட்டல் எஞ்சின்களால் (liquid-cooled engines) இயக்கப்படுகின்றன. அத்துடன், இந்த மோட்டார் சைக்கிள்கள் இலகுரக split trellis frame மற்றும் மேம்பட்ட WP APEX USD சஸ்பென்ஷன் தொகுதிகளைக் கொண்டுள்ளதால், சிறந்த கையாளுகை, ஸ்திரத்தன்மை மற்றும் அதிக வேகத்தை வழங்குகின்றன.
தெரிவு செய்யப்பட்ட KTM மாதிரிகளில், ரைடர்களை மையமாகக் கொண்ட மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் four-piston radial-mounted callipers, ABS உடனான ride modes, Supermoto ABS, ride-by-wire systems, slipper clutches, Quickshifter+ செயற்பாடு உள்ளிட்ட பல ஸ்மார்ட் அம்சங்களுடன், நவீன வர்ண TFT டிஸ்பிளே கொண்டதாக காணப்படுகின்றது. இவை மேம்பட்ட பாதுகாப்பு, கட்டுப்பாடு மற்றும் உடல் சிலிர்க்கும் மோட்டார் சைக்கிள் அனுபவத்தை வழங்குகின்றன.
இலங்கையில் KTM மோட்டார் சைக்கிள்களுக்கான ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DPMC, நாடளாவிய ரீதியில் விரிவான காட்சியறைகள் மற்றும் சேவை வலையமைப்பை நிறுவுவதற்கான திட்டங்களை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதுடன், இந்த விரிவாக்கப் பயணத்தில் ‘KTM Peliyagoda’ மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
மேலதிக விபரங்களை அறியவும், KTM மோட்டார் சைக்கிள்களின் தனித்துவமான உலகத்துடன் இணையவும் 077 077 8051 எனும் இலக்கத்தின் மூலம் KTM Peliyagoda காட்சியறையைத் தொடர்பு கொள்ளவும்.
ஒருவருக்கு மோட்டார் சைக்கிள் திறப்பை கையளித்த போது எடுக்கப்பட்ட படம்
Записал в закладки, ценю ваш блог!