Seylan Bank has launched its latest Seylan Cards Redeem & Win promotion, giving Seylan Cardholders another exciting reason to make the most of their accumulated reward points. Running from 1 July to 31 August 2026, the campaign offers Seylan Cards Rewards Programme members the opportunity to win two return air tickets to Malaysia, courtesy of…
போட்டித்தன்மை வாய்ந்த செலவு காரணி கார்பன் குறைப்பை சந்திக்கும் போது: Teejayஇன் எரிசக்தி மாற்றத்திற்குள் ஒரு பார்வை
உலகளாவிய ஜவுளித் துறையில் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், Teejay Lanka PLC நிறுவனம் தனது Abhivarah 2030 சுற்றுச்சூழல் நிலைத்தன்மை உத்தியின் கீழ், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் குறைந்த கார்பன் செயல்பாடுகளில் பெரிய முதலீடுகளைச் செய்வதன் மூலம் தனது நீண்டகால போட்டித்திறனை வலுப்படுத்தி வருகிறது.
இந்த நிறுவனம் இரண்டு முக்கிய ஆற்றல் மாற்றத் திட்டங்களுக்காக 5.2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளது. அவை, 2.57 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான 7.2 மெகாவாட் (MW) Rooftop Solar கட்டமைப்பு மற்றும் நிலக்கரியிலிருந்து நிலையான சான்றளிக்கப்பட்ட உயிரியல் எரிபொருளுக்கு (Biomass) மாறுவதற்கான 2.65 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான திட்டமாகும். இந்த இரு திட்டங்களும் இணைந்து, ஆற்றல் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கவும், ஆற்றல் பாதுகாப்பை மேம்படுத்தவும் மற்றும் அறிவியல் அடிப்படையிலான இலக்குகள் முன்முயற்சியால் (SBTi) அங்கீகரிக்கப்பட்ட Teejay நிறுவனத்தின் பருவநிலை அர்ப்பணிப்புகளை விரைவுபடுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 2026க்குள் மின்விநியோகக் கட்டமைப்புடன் (Grid) இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த Rooftop Solar மின்சக்தித் திட்டம், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வெளியேற்றத்தை (Emissions) 13% குறைக்கும் அதே வேளையில், அந்த ஆலையின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பங்கை 17% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுதியில் ஒப்பீட்டளவில் சூரிய ஒளியின் மூலமான மின் உற்பத்தித் திறன் (Solar yield) குறைவாக இருப்பதாலும், முதலீட்டைத் திரும்பப் பெறுவதற்கான காலம் (Payback period) அதிகமாக இருப்பதாலும், நிலையற்ற உலகளாவிய ஆற்றல் சந்தைகளுக்கு எதிரான ஒரு நெகிழ்வுத்தன்மைக்கான (Resilience) மூலோபாய முதலீடாகவே Teejay நிறுவனம் இத்திட்டத்தைக் கருதுகிறது.
இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்குப் பதிலாக, உள்ளூரிலேயே பெறப்படும் உயிரியல் எரிபொருளைப் (Biomass) பயன்படுத்துவதன் மூலம், இந்த நிறுவனம் தனது மிகப்பெரிய வெளியேற்றக் குறைப்பை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொழிற்சாலை அளவிலான பசுமை இல்ல வாயு (Greenhouse gas) வெளியேற்றத்தை 49% குறைக்கவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை 42% அதிகரிக்கவும், எரிபொருள் செலவுகளை 25-30% வரை குறைக்கவும் வழிவகுக்கும்.
Teejay நிறுவனம் இரண்டு புதிய திட்டங்கள் மூலம், 2030ஆம் ஆண்டிற்கான 42% ஸ்கோப் 1 மற்றும் 2 வெளியேற்றக் குறைப்பு இலக்கை செப்டம்பர் 2026க்குள், முன்கூட்டியே எட்ட உள்ளது. நிறுவனத்தின் வெளியேற்ற தரவுகள் ISO 14064 தரநிலையின் கீழ் சரிபார்க்கப்பட்டு, முதல் IFRS S1 மற்றும் S2 நிலைத்தன்மை அறிக்கைகளுடன் வெளியிடப்பட்டுள்ளன.
பரந்த விநியோகச் சங்கிலியில் உள்ள ஸ்கோப் 3 (Scope 3) வெளியேற்றக் குறைப்பது அடுத்த முக்கிய சவாலாக இருந்தபோதிலும், Teejay நிறுவனம் தனது ‘Abhivarah 2030’ உத்தியின் கீழ், விநியோகஸ்தர்களுடனான ஈடுபாடு, பொறுப்பான கொள்முதல் மற்றும் சுழற்சி பொருளாதார முயற்சிகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
Teejay நிறுவனத்தைப் பொறுத்தவரை, நிலைத்தன்மை என்பது ஒரு சுற்றுச்சூழல் அர்ப்பணிப்பு என்பதைத் தாண்டி, ஒரு வணிக உத்தியாகவே மாறியுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முதலீடு செய்வதன் மூலமும், இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களின் (Fossil fuels) மீதான தேவையைக் குறைப்பதன் மூலமும், இந்நிறுவனம் தனது செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதோடு, உலகளாவிய ஜவுளித் துறையில் இலங்கையின் போட்டித்திறனையும் வலுப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.