For more than three decades, Selyn Group has continuously evolved by responding to the realities of the communities connected to its operations. Since its founding in 1991 as a small handloom enterprise, Selyn has grown into a diversified fair-trade business spanning ethical manufacturing, retail, exports, sustainable product innovation, and community development. At the heart of…
யாழில் கடற்தொழிலாளர்களின் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டமானது, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக நேற்று (29) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தாளையடி, நன்னீர் திட்ட நிறுவனத்தால் வடமராட்சி கிழக்கு கடல் தொழிலாளர்களுக்கும் சமாசத்திற்குட்பட்ட அனைத்து துணைச் சங்கங்களுக்கும் இரண்டு படகுகள் வெளி இணைப்பு இயந்திரத்துடன் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த படகு வழங்கலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும், தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு இருப்பதாகவும் வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் மேற்கு மக்களால் பிரதேச செயலகத்தில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில், கலந்து கொண்ட மக்கள் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்க சமாச தலைவரை தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு அழைத்த போது, மக்கள் போராட்டம் செய்யும் இடத்திற்கு வரவேண்டிய தேவை இல்லை என்றும் தன்னை சந்திக்க விரும்பினால் சமாசத்தின் அலுவலகத்திற்கு வந்து சந்திக்குமாறும் தெரிவித்துள்ளதாக போராட்டக்காரர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
Heard about fb88188166, so I checked it out. Seems legit, decent options. Explore here: fb88188166
So, I stumbled on 678bet. It’s alright haha. I was a bit wary, but it seems legit enough for a little risk. The games seem kinda fair and worth risking the cash. Go check it out: 678bet.