Colombo, 13 August 2026: The Indian Cultural Association (ICA) today announced the launch of the third edition of the ICA International Marathon, scheduled to take place on 13 December 2026 at Galle Face Green, Colombo. The event is set to bring together runners, fitness communities, corporate teams, and international participants for a certified road-running experience…
வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள் கண்களுக்கு தெரியவில்லையா ? – யாழில் போராட்டம்
யாழ் மாவட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி வட மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (20) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
தற்போதைய ஆளுநரான நா. வேதநாயகன், 2019ஆம் ஆண்டு யாழ் மாவட்ட செயலராக கடமையாற்றிய காலத்தில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் இன்று வரை வழங்கப்படவில்லை
இதனால் அக்கால பகுதியில் வீட்டு திட்டங்களை பெற்ற பயனாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும் நிலையில் மழை காலங்களில் இருக்க இடம் இல்லாமல் அல்லல் படம் செயற்பாடுகள் வருடங்களாக தொடர்ந்து இடம்பெறுகிறது.
தற்போதைய அரசாங்கம் பாரபட்சமற்ற அரசாங்கம் என கூறி ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஆட்சியரிடம் பெற்ற வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்காமல் தங்களது ஆட்சியில் புதிய வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவை வழங்குகிறார்கள்.
இந்த செயற்பாடு பாதிக்கப்பட்ட எமக்கு மிகவும் மன வேதனையை தருவதோடு தற்போதைய ஆளுநர் கூட இது தொடர்பில் மௌனமாக இருப்பது நமக்கு மிகுந்த மன வருத்தத்தை தருகிறது.
யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி அனுரகுமாரா திசநாயக்க வீதியில் நடந்து திரிகிறார் ஆனால் யாழ் மாவட்டத்தில் வீடுகள் இல்லாமல் அரைகுறை வீடுகளில் தங்கி உள்ளோரை சந்திப்பதற்கு அவருக்கு நேரம் கிடைக்கவில்லை.
ஆகவே எமது பிரச்சனை தொடர்பில் வடமாகண ஆளுநருக்கு மீண்டும் தெரியப்படுத்தியுள்ளோம் எமது பிரச்சினையை விரைந்து தீர்க்க விடியின் எமது போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.