இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றிற்கிடையில் 15-வது தடவையாகவும் நடைபெறவுள்ள “Battle of Hindus” கிரிக்கெட் பெருஞ்சமர் போட்டியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்டமான நடைபவணி (Big Match Walk 2026), இன்றைய தினம் (07/03/2026) மிகவும் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் இளையதம்பி இலங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆயிரக்கணக்கானோர்…
வெளிநாட்டு நிவாரண உதவிகளுக்கான களஞ்சிய மேலாண்மை –அதிகாரிகளுக்கு ஆலோசனை
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தின் மேலதிக செயலாளர் மற்றும் அதிகாரிகள், வெளிநாட்டு நிவாரண உதவிகளுக்கான களஞ்சிய மேலாண்மை பொறுப்புகளை ஒதுக்குதல், மேலும் நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் கண்காணிப்பிற்காக உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான சரக்கு முகாமைத்துவ அமைப்பை முறையாக கையளித்து பயன்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய செயல்பாட்டு விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகள் (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின் ஐந்தாவது கூட்டம் செவ்வாய்க்கிழமை (23) மாலை பிரதி பாதுகாப்பு அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.
க்கூட்டத்தில், இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகளின் மேலாண்மை, ஒருங்கிணைப்பு மற்றும் பயனுள்ள விநியோக முறைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தபட்டது.
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தின் மேலதிக செயலாளர் மற்றும் அதிகாரிகள், வெளிநாட்டு நிவாரண உதவிகளுக்கான களஞ்சிய மேலாண்மை பொறுப்புகளை ஒதுக்குதல், மேலும் நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் கண்காணிப்பிற்காக உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான சரக்கு முகாமைத்துவ அமைப்பை முறையாக கையளித்து பயன்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய செயல்பாட்டு விடயங்கள் தொடர்பாக விரிவான விளக்கங்களை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, பிரதி பாதுகாப்பு அமைச்சர், தொடர்புடைய செயல்பாட்டு மற்றும் நிர்வாக சவால்களை ஆராய்ந்து,அவற்றை உடனடியாக தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார்.


188betlogin is a really solid platform for sports betting! Easy to navigate, loads of markets. Highly recommended for fellow punters. 188betlogin
RSS99game is pretty neat! Honestly, I enjoy the variety of games they offer. A good time killer, for sure. See if you like it too: rss99game