இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
வைரலாகும் CSK வெளியிட்டுள்ள வீடியோ
IPL அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ளார். அவரை டிரேட் முறையில் சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. அவரை வரவேற்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளங்களில் AI வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் சென்னை மைதானத்தில் எம்எஸ் தோனி சிஎஸ்கே ஜெர்சியிலும் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ஜெர்சியிலும் ரசிகர்களுக்கு மத்தியில் உள்ளனர். அப்போது தோனி ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து கை காட்டுவார். அந்த கூட்டத்தில் ஒரு பேனரில் விசில் போடு சஞ்சு சாம்சன் என எழுத்தப்பட்டிருந்தது.
இதனை பார்த்த சஞ்சு சந்தோசத்தில் குதிப்பார். உடனே அவரது ஜெர்சியில் மஞ்சள் நிறமாக மாறும். இவ்வாறு அந்த AI வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
