பெங்கொக்கின் மிகவும் பிரபலமான Soho Hospitality நிறுவனத்திற்குச் சொந்தமான Charcoal Tandoor Fire Grill உணவகம், இலங்கை மக்களுக்காகப் புதியதொரு அனுபவத்தை வழங்கும் நோக்குடன் கொழும்பில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு யூனியன் பிளேஸில் அமைந்துள்ள Capitol Twin Peaks இன் 50வது மாடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த தனித்துவமான உணவகத்தின் நோக்கம், இலங்கையர்களுக்கு உயர்தர உணவு அனுபவத்தை வழங்குவதாகும். இலங்கையின் முன்னணி இசை ஜாம்பவான்களான பாத்திய ஜயகொடி, சந்துஷ் வீரமன் மற்றும் மெவன் குணதிலக்க ஆகியோரின் கூட்டு…
ஹௌதி இயக்கம் அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை
ஈரானின் அணு நிலையங்களை தாக்கியதன் மூலம் அமெரிக்கா இந்த போரை முடிக்க முடியும் என நினைத்தால் அது பிழையான நம்பிக்கை என யேமனின் ஹௌதி இயக்கத்தின் அரசியல் பிரிவு உறுப்பினர் முகமட் அல்-ஃபராஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
டிரம்ப் விரைவில் தாக்குதல்களை முடித்து போரை முடிக்க விரும்புகிறார் என்பது தெளிவாக உள்ளது. ஆனால் ஒரு அணு தளத்தை அழிப்பது போரின் முடிவு இல்லை, அது ஒரு தொடக்கமே என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்கு-ஓடு” எனப்படும் பழைய போர் முறைமை இப்போது உண்டாகாது என்றும், எதிராளிகளிடம் கடும் பதிலடி இருக்கும் என்றும் அல்-ஃபராஹ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஹௌதி இயக்கம், அமெரிக்கா ஈரானை இஸ்ரேலுடன் இணைந்து தாக்கினால், சிவப்பு கடலில் அமெரிக்க கப்பல்களை தாக்குவோம் என எச்சரிக்கை விடுத்தது.
ஈரான்-இஸ்ரேல் மோதல் ஏற்கனவே மத்திய கிழக்கு வட்டாரத்தில் பதற்றம் ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹௌதி இயக்கத்தின் இந்த எச்சரிக்கை, மண்டலத்திற்கு மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தும் என சர்வதேச ரீதியில் கவலை எழுந்துள்ளது.