உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
அச்சுவேலி பிரதே வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமானது ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவனின் வழிகாட்டலில் இன்று (மார்ச் 9) அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த வேலைத்திட்டத்தில் பிரதேச வைத்தியசாலையின் பணியாளர்கள், நோயாளர் நலன்புரி சங்கத்தினர், அச்சுவேலி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், அச்சுவேலி சிற்றூர்தி சங்கத்தினர், சன சமூக நிலைய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செயற்த்திட்டத்தின் போது அச்சுவேலி பிரதேச சபையின் உதவியுடன் பிரதேச வைத்தியசாலையில் உள்ளக வளாகங்களை துப்புரவு செய்ததோடு வைத்தியசாலையின் வளாகத்தில் புதிய மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தனர்





