உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (28) மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளது. கடந்த 24 மற்றும் 25ஆம் திகதிகளில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்களுக்குக்கு இன்றும் (25) நாளையும் (29) தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல…
அடுத்த இரு நாள்களுக்கு தலதா யாத்திரையை தவிர்க்குமாறு கோரிக்கை

ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக யாத்திரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த இரண்டு நாள்களுக்கு யாத்திரை நடவடிக்கையை தவிர்க்குமாறு பொலிஸார், பொதுமக்களைக் கோரியுள்ளனர்.
ஸ்ரீ தலதா வழிபாடு கடந்த 18ஆம் திகதி ஆரம்பமானது. தற்போது குறித்த யாத்திரைக்காக கண்டி நகரில் ஏற்கனவே மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்திரீகர்கள் வரிசையில் கூடியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
எனவே, நாளை (24) மற்றும் நாளை மறுநாள் (25) புனித தந்த தாது வழிபாட்டுக்கு ஏற்கனவே போதுமான எண்ணிக்கையிலான யாத்திரீகர்கள் வந்துவிட்டதால், அடுத்த இரண்டு நாட்களுக்கும் யாத்திரீகர்கள் வந்தால், அவர்களால் யாத்திரை மேற்கொள்ள முடியாது என்று பொலிஸர் கூறுகின்றனர்.
எனவே, அடுத்த இரண்டு நாட்களுக்கு ஸ்ரீ தலதா வழிபாட்டில் கலந்து கொள்வதைத் தவிர்க்குமாறு யாத்திரீகர்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.