டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
அதிகரித்து வரும் சிவனொளிபாத மலைக்கான யாத்திரியர்கள் – வாகன நெரிசல் கட்டுப்பாட்டை இழந்தது

சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் நல்லதண்ணி – சிவனொளிபாதமலை வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி காரணமாக நேற்று (மார்ச் 28) காலை முதல் கணிசமான எண்ணிக்கையான யாத்திரிகர்கள் சிவனொளிபாத மலைக்கு வருகைதந்தவண்ணம் உள்ளனர்..
இதனால் ஏற்பட்ட கடும் வாகன நெரிசல் காரணமாக யாத்திரிகர்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டியுள்ளது.
நல்லதண்ணியில் அமைந்துள்ள நான்கு வாகன நிறுத்துமிடங்களும் யாத்திரிகர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளால் நிரம்பி வழிகின்றன.
இதன் காரணமாக நல்லதண்ணி – மஸ்கெலியா வீதியின் இருபுறமும் ஏனைய வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை அடுத்ததடுத்த வாரங்களில் இந்நிலைமை மோசமடையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. காரணம் சிங்கள – தமிழ் புதுவருடத்தை ஒட்டி நீண்ட விடுமுறை நாட்கள் வருகின்றமையினாலும் வருகின்ற மே மதத்துடன் சிவனொளிபாதமலைக்கான யாத்திரை காலம் முடிவடைவதனாலும் பெரும்பாலான யாத்திரைகள் எதிர்வரும் வாரங்களில் இங்கு வரக்கூடும் என்பதனால். போக்குவரத்துதொடர்பில் சற்று அவதானமாக இருப்பது சிறப்பென குறிப்பிடுகின்றோம்.
