அமெரிக்கா இலங்கைக்கு விதித்துள்ள புதிய பரஸ்பர வரி – சாதக, பாதகங்களை கண்டறிய குழுவொன்றை நியமித்தார் ஜனாதிபதி

இலங்கையில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி நேற்று (ஏப்ரல் 02) அறிவித்துள்ள நிலையில், இந்த வரித்திட்டமானது நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 05ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை சமர்ப்பிக்க நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கி ஆளுநர், முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு சபை தலைவர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்

குறிப்பாக இலங்கையில் இருந்து அதிகளவாக ஆடை மற்றும் இறப்பர் பொருட்களையே அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறோம். இதன் சந்தை மதிப்பு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

பொருளாதாரம் மீண்டுவரும் நிலையில் “இலங்கை மீதான 44% வரி பாரிய ஒரு பின்னடைவை வழங்கும். ஆடை மற்றும் இறப்பர் பொருட்களை ஏற்றுமதி செய்யும் எமது அண்டை நாடுகளான இந்தியாவிற்கு 26% வரியும், பங்களாதேசிற்கு 37% வரியும், தாய்லாந்திற்கு 36% வரியும், இந்தோனோசியாவிற்கு 32% வரியும் விதிக்கப்பட்டுள்ளது..

அதேநேரம் அதிகளவு இறப்பரை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் வியட்னாமிற்கு 46% வரி அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி டோனட் ட்ரம்ப் இந்த வரிகளைப்பற்றி அறிவிக்கையில்,”நட்புநாடாக இருந்தாலும், பகைவர்களாக இருந்தாலும் எங்கள் உற்பத்திகளுக்கு அதிக வரிகளை அரவிடுகின்றார்கள். அதனால் நாங்களும் எங்கள் கொள்கைகளை மாற்றியமைக்கின்றோம். இதற்க்கு செவிசாய்க்காதவர்களின் சந்தைவாய்ப்பை எங்கள் நாட்டில் இருந்து இல்லாமல் செய்வோம் என” கூறியிருந்தார்.

எது எவ்வாறாயினும் இலங்கை பணவீக்க சிக்கலில் இருந்து மீண்டு வரும் நிலையில் இது ஒரு பாரிய நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கும் வாய்ப்பு இருக்கலாம் என பொருளியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

வெகு விரைவில் இதற்கான மாற்று சந்தை வாய்ப்பை இலங்கை உருவாக்க வேண்டிய நிலை பற்றிய பார்வையை நாம் மேற்கொள்ளவேண்டும். பொறுத்திருந்து பார்க்கலாம் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை என்ன என பொறுத்திருந்து பார்ப்போம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *