இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அச்சுறுத்துகிறார்கள் – எதிர்கட்சிதலைவர்.

தற்போதைய அரசாங்கம் என்னவாறான பொய்களை எல்லாம் கூற முடியுமோ அத்தனையையும் கூறி, மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச களனி பிரதேசத்தில் நேற்று (வெப்ரவரி 16) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
சொன்னவற்றை செய்ய முடியாமல் தடுமாறும் அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்பினரை அவர்கள் அச்சுறுத்துகிறார்கள் எனவும், இந்த அரசாங்கம் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பனவற்றை மீறி செயட்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்