டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
எதிர்வரும் காலத்தில் அரச நிறுவனங்களில் மொழிபெயர்ப்பாளர்கள் குழு.

கொழும்பு: இலங்கையிலுள்ள அரச நிறுவனங்களுக்காக விசேட மொழிபெயர்ப்பாளர் குழுவை உருவாக்க தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கையில் மூன்று மொழி பேசும் மக்கள் வாழ்கின்றார்கள். ஆனால் அரசகரும மொழியாக பெரும்பாலும் சிங்கள மொழி பயன்படுவதனால் ஏனைய மொழிகளை அறிந்தவர்கள் அரச சேவையினை பெற்றுக்கொள்ள சிரமங்களை அனுபவிக்கின்றார்கள். இந்த சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதி அமைச்சர் முனீர் முலாபர் தெரிவித்தார்.
அதனடிப்படையில் அரச சேவையில் பல்வேறு மொழித்திறன் கொண்ட தொழில் வல்லுநர்களை உள்வாங்க தீர்மானித்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.