உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
அரச வெசாக் பண்டிகை இந்த ஆண்டு நுவரெலியாவில்!

இந்த ஆண்டு அரச வெசாக் பண்டிகை நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடத்த புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு முடிவு செய்துள்ளது.
அதன்படி, தேசிய வெசாக் வாரம் மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச வெசாக் பண்டிகை குறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பௌத்த ஞானம் ஏற்படும் வகையில், இந்த ஆண்டு அரச வெசாக் கொண்டாட்டம் அனைத்து இன மக்களின் பங்கேற்புடன் நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அரச வெசாக் தினக் கொண்டாட்டத்தை மே 12 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினத்தன்று நுவரெலியாவில் நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.