டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
அவசர அவசரமாக கூடவுள்ள உச்சி மாநாடு.

உக்ரைன் குறித்து அமெரிக்கா ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு ரஸ்யாவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் ஐரோப்பிய தலைவர்கள் அவசர அவசரமாக சந்திப்பொன்றை செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸ் தலைநகரில் இடம்பெறவுள்ள இந்தமாநாட்டில் பிரிட்டிஸ் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் உட்பட பல ஐரோப்பிய தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
சுமுகமான ஒரு அணுகுமுறையை உக்ரைனிற்கான சமாதானத்தில் உருவாக்குவதற்காக ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் இணைப்பதே தனது பணி என பிரிட்டிஸ் பிரதமர் கூறியதோடு ஐரோப்பிய தலைவர்களுடன் இந்த மாநாட்டில் தான் ஆராயும் விடயங்கள் குறித்து இந்த மாத இறுதியில் அமெரிக்காவிற்கு செல்லவிருக்கும் வியாயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதிக்கு எடுத்துரைக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
அமெரிக்க பயணத்தை முடித்து திரும்பியதும் உக்ரைன் ஜனாதிபதி உட்பட ஐரோப்பிய தலைவர்களை பிரிட்டிஸ் பிரதமர் சந்திக்கவுள்ளார்.