FACETS Sri Lanka 2027 | 4–6 January 2027 | Cinnamon Life – City of Dreams, Colombo A grander pavilion, a “Bridges of Light” design competition, Sapphire Night and a new Gem Conversations morning headline the 34th edition, from 4 to 6 January 2027 at Cinnamon Life Sri Lanka’s gemstones have long dazzled the world. At…
பேபிசெரமி அறிமுகப்படுத்தும் இலங்கையின் முதலாவது Generative AI ‘Baby Cheramy Diaper Helpdesk’ 24/7 நம்பிக்கைக்குரிய குழந்தை வளர்ப்பு பங்காளி
இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு சமூகத்திற்கும் தரமான தகவல்கள் கிடைக்க வழிகோலுகின்றது. தயாரிப்புகளுக்கு அப்பால் இந்த வர்த்தகநாமமானது, நாளாந்த குழந்தை வளர்ப்பினை எளிதாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட நவீன டிஜிட்டல் தீர்வுகளின் ஊடாக பெற்றோருக்கு நம்பகமான ஆதரவு, வழிகாட்டல் மற்றும் பராமரிப்பை வழங்குகிறது.
இந்த புத்தாக்கத்துடன் இந்த வர்த்தகநாமமானது, குழந்தை பராமரிப்புக்கான சான்றளிக்கப்பட்ட மருத்துவ நிபுணத்துவத்துடன் கூடிய முதல் AI இனால் வலுவூட்டப்படும் அறிவார்ந்த வினவல் ( தளத்தை (AI-powered intelligent query platform) அறிமுகப்படுத்துவதன் மூலம் குழந்தை பராமரிப்பு பரப்பினை நிலைமாற்றுகின்றது. இந்த ‘Baby Cheramy Diaper Helpdesk’ ஆனது அதிநவீன இயற்கை மொழி செயலாக்கம் (NLP) மற்றும் இயந்திர கற்றல் வழிமுறைகளைப் பயன்படுத்தி, சூழல் குறித்த விழிப்புணர்வுடன் கூடிய, அறிவார்ந்த பதில்களை நிகழ்நேரத்தில் வழங்குகிறது. உறுதி செய்யப்பட்ட அனைத்து பதில்களும் ஒரு மையப்படுத்தப்பட்ட அறிவு மையத்தில் முறையாக காப்பகப்படுத்தப்படுகின்றமையானது, தொடர்ச்சியான கற்றல் மற்றும் நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்ட தகவல்களின் வளர்ந்து வரும் களஞ்சியத்துக்கான உடனடி அணுகலுக்கும் வழி செய்கின்றது. ஒவ்வொரு மருத்துவ பதிலும் Ayubo Health இன் நிபுணர்கள் குழுவால் மீளாய்வு செய்யப்பட்டு உறுதிசெய்யப்படுகின்றது. இது பெற்றோர்கள் உள்ளூர் குழந்தை வளர்ப்பு தேவைகளுக்கு ஏற்ற நம்பகமான ஆலோசனையைப் பெறுவதனையும், தவறான தகவல்களைத் தடுக்க கடுமையான பாதுகாப்புகள் காணப்படுகின்றமையையும் உறுதி செய்கிறது.
Baby Cheramy Diaper Helpdesk மூலம், பெற்றோர்கள் தங்கள் டயப்பர் பராமரிப்பு குறித்த கவலைகளுக்கு நிகழ்நேர, 24 மணி நேர ஆதரவைப் பெறுகிறார்கள். இரவு நேரமோ அல்லது வேலைப்பளு மிக்க நாளோ, எதுவாக இருந்தாலும் Baby Cheramy Diaper Helpdesk ஆனது நிபுணர்களால் உறுதிப்படுத்தப்பட்ட பதில்களை உடனடியாக வழங்குகிறது. பெற்றோருக்கு நம்பகமான தகவல்களுடன் குழந்தை வளர்ப்பினை இலகுவாக்கும் உற்ற துணையாக Baby Cheramy diaper helpdesk ஆனது இலங்கையின் மிகவும் விரும்பப்படும் குழந்தை வர்த்தக நாமமான பேபி செரமியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னேற்றமடைந்து வரும் நுகர்வோர் ஈடுபாட்டு பயணங்களில் ஆக்கபூர்வமான உரையாடல்களை கட்டியெழுப்புவதன் மூலம் வலுவூட்டப்பட்ட குழந்தை வளர்ப்பு பயணத்தை உருவாக்க இது வர்த்தகநாமத்துக்கு ஆதரவளிக்கின்றது.
இது குறித்து Hemas Consumer இன் முகாமைத்துவ பணிப்பாளர் சப்ரினா யூசுபலி கருத்து தெரிவிக்கையில், ”பேபி செரமி எப்போதும் நம்பிக்கை, பராமரிப்பு மற்றும் புத்தாக்கத்தின் அடையாளமாகத் திகழ்கின்றது. இந்த Baby Cheramy Diaper Helpdesk இன் அறிமுகத்தின் மூலம் பெற்றோருக்கு அர்த்தமுள்ள ஆதரவை வழங்க நாம் தயாரிப்புக்கு அப்பால் செல்கின்றோம். இது இலங்கை குடும்பங்களை நம்பகமான, நிபுணர் ஆதரவுடன் கூடிய வழிகாட்டுதலுடன் வலுவூட்டுவது பற்றியதென்பதுடன், ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பு, தரம் மற்றும் பராமரிப்புக்கான எங்கள் அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் மீளுறுதி செய்கின்றது. இந்த அணுகுமுறை பெற்றோருக்கு அவர்களின் குழந்தைகளின் நல்வாழ்வுக்கான எங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், புரிதல், நம்பகத்தன்மை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு உணர்வு ரீதியான தொடர்பையும் வலுப்படுத்துகிறது. மேலும் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை வளர்ப்பு பயணத்தில் நம்பிக்கையுடனும், தகவலறிந்தவர்களாகவும், ஆதரவுடனும் உணர வலுவூட்டுகின்றது.”என்றார்.
”Baby Cheramy Diaper Helpdesk என்பது பெற்றோருக்கு ஒரு புரட்சிகர அனுபவமாகும். இது இலங்கையின் முதல் generative AI டயப்பர் பராமரிப்பு தளமாகும். இது 24/7 கிடைப்பது மட்டுமன்றி மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டு, உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்தையில் உள்ள வேறு எதையும் போலல்லாமல், இது பெற்றோருக்கு நம்பகமான பதில்களுக்கு உடனடி அணுகலை வழங்குகின்றது. மேலும், மொழி ரீதியான தடைகளை உடைப்பதோடு, அனைத்து சமூகங்களுக்கும் தரமான வழிகாட்டுதலை வழங்குகின்றது,”என சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷியான் ஜயவீர குறிப்பிடுகின்றார்.
வெறும் வர்த்தக நாமமாக இல்லாமல் உண்மையான குழந்தை வளர்ப்பு பங்காளராக தன்னை நிலைநிறுத்தும் பேபி செரமியின் பயணத்தில் Baby Cheramy Diaper Helpdesk இன் அறிமுகமானது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. பேபி செரமி டயபர் பொதிகளில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமோ அல்லது 077 144 3636 என்ற இலக்கத்தை சேமிப்பதன் மூலமோ பெற்றோர்கள் WhatsApp ஊடாக உடனடியாக ‘Baby Cheramy Diaper Helpdesk’ ஐ அணுகலாம்.
பேபி செரமி டயப்பர்கள் சரும மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட்டு சான்றளிக்கப்பட்டவை என்பதுடன் தோல் எரிச்சலை ஏற்படுத்தாது என மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நாப்கின் போல மென்மையாக இருந்தாலும், சிறப்பான உறிஞ்சும் தன்மையுடன் மேம்படுத்தப்பட்ட இந்த டயப்பர்கள், குழந்தைகளை நாள் முழுவதும் உலர்வாகவும், வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வர்த்தகநாமம் இப்போது குழந்தையின் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட முழுமையான டயப்பர் தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. இதில் பாதுகாப்பு, நெகிழ்வுத்தன்மை மற்றும் நாள் முழுவதும் சௌகரியத்துக்காக வடிவமைக்கப்பட்ட புதிதாகப் நிவ்போர்ன் டயப்பர்கள் மற்றும் பேபி பேண்ட்கள் அடங்குகின்றன.
இலங்கை குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்காக பேபி செரமி 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றது. அதன் முன்னோடியான ‘குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலகம்’ செயற்திட்டமானது அதன் பரந்த சமூகப் பொறுப்புணர்வுக்கு ஒரு சான்றாகும். Baby Cheramy Diaper Helpdesk சேவையின் அறிமுகமானது பாதுகாப்பு குறித்த அதன் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.
Hemas Consumer Brands பற்றி
60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை அனுபவிப்பதற்கு வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்வதோடு, இது இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தன்னை நிறுவுதல் எனும் அவர்களது நோக்கத்தை அடைய உதவுகின்றது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.
**mindvault**
mindvault is a premium cognitive support formula created for adults 45+. It’s thoughtfully designed to help maintain clear thinking
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.