டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
ஆண்டுதோறும் நிகழும் மொத்த இறப்புகளில் 83 வீதமானவை தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் ஆண்டுதோறும் நிகழும் மொத்த இறப்புகளில் 83 வீதமானவை தொற்றா நோய்களால் ஏற்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் தரவுகளின்படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 வீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வயது வந்தோரில் 20 வீதமானோர் உயர் இரத்த அழுத்தம் இருப்பதை அறியாமல் ஆண்டுதோறும் அண்ணளவாக 60,000 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களில் 4,000 பேர் ஆண்டுதோறும் இறக்கின்றனர் அல்லது அங்கவீனமடைகிறார்கள் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் வயது வந்தோரில் 20 வீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 41 வீதமானோர் சிகிச்சை பெறுவதில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.