ஆரம்பமாகும் தவக்காலம்.

Ash Wednesday – திருநீற்றுப் புதன் என்றால் சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுகிற­து.

திருநீறு பூசும் நிகழ்ச்சி திருப்பலியின்போது நடத்தப்படுகின்றது. “மனி­தா, மண்ணாய் பிறந்த நீ மண்ணுக்கே திரும்புவாய்” என்று கூறி அருட்தந்தையர் நெற்றியில் திருநீற்றைப் பூசுகின்றார்கள்.இந்த சடங்கின் மூலம் இயேசுவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரமபமாகின்றது.

இந்த தவக்காலத்தில் 16 வயதுக்குட்பட்­டவர்கள் சுத்த போசனமும், 18 வயது தொடக்கம் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் வாரத்தில் ஒருநாளாவது உண்ணா நோன்பு இருப்பது நன்மை.

இயேசு பாலைவனத்தில் 40 நாட்கள் உபவாசம் இருந்தது முதல் அவர் கல்வாரி மலையில், சிலுவையில் உயிர் துறந்தது வரையான அவரது திருப்பாடுகளை நினைவுகூர்ந்து இன்றிலிருந்து எமது வாழ்வில் ஒரு மன மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

இறை இயேசுவுக்குகந்த மக்களாக வாழ வரம் வேண்டி இந்நாட்களில் பிராத்திப்போம். நாம் அனைவரும் என்றேனும் ஒருநாள் மண்ணுக்குத் திரும்புவோம். அதற்கு நம் நெற்றியில் பூசப்படும் சாம்பல் தான் அடையாளம். நாம் மண்ணுக்குள் போவதற்குள் மனம் திருந்தி, நம் பாவங்களை ஏற்றுக்கொண்டு, தீய எண்ணங்களை தவிர்த்து, அன்பு, கருணை, இரக்கம் ஆகிய குணங்களை உள்வாங்கி, எங்களுடைய மண்ணுலக வாழ்வை செம்மைப்படுத்த இந்த தவக்காலத்தைப் பயன்படுத்துவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *