இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
ஆர்ஜெண்டினாவில் அரசியல் பதற்றம்.

ஆர்ஜென்டினாவில் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானனத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆர்ஜெண்டீனா ஜனாதிபதியின் அண்மைக்கால செயற்பாடுகள் முதலீட்டாளர்களை பாதிப்பதாக கூறப்படுவதோடு அந்த நட்டு சட்டத்தரணிகள் பலர் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே இந்த ஊழலில் இருந்து தன்னை விடுவிக்குமாறும், தான் நல்லேன்னுத்துடன் செயற்பட்டதாகவும் ஆர்ஜென்டினா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.