டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
ஆளும் கட்சி எம்.பி பயன்படுத்திய வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுசந்த தொடாவத்தை, அவரது மனைவிக்குச் சொந்தமான ப்ராடோ ரக சொகுசு வாகனமொன்றை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கண்காணிப்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், குறித்த வாகனம் இன்று (மார்ச் 25) பிலியந்தலை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சுசந்த தொடாவத்தை வேறு பெண்களுடன் முறைகேடான உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி அவரது மனைவி, அவரிடமிருந்து விவாகரத்துக் கோரி கெஸ்பேவ நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்க