Power World Gyms, Sri Lanka’s leading fitness brand with over 30 years of promoting healthier lifestyles, has partnered with Kings Hospital Colombo as its Official Wellness Partner. This collaboration brings together expertise in fitness and healthcare to introduce a dedicated wellness programme for the hospital’s staff, supporting their physical and mental well-being. Through this partnership,…
இந்திய பிரதமருக்கு இலங்கையில் அமோக வரவேற்பு.
இலங்கையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் மோடியின் முதல் உத்தியோக பூர்வ இலங்கை விஜயமாக இது அமைந்துள்ளது.
இந்த நிலையில் தனது எக்ஸ் தளத்தில் இந்திய சமூகத்தினரின் வரவேற்பு தொடர்பில் காணொளியொன்றை பதிவிட்டு “அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றி!” எனவும் கூறியுள்ளார்.
அதேநேரம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸாநாயக்க தலைமையில் இன்று (ஏப்ரல் 05) காலை அதிகார பூர்வ வரவேற்பளிக்கப்பட்டது.
இதனை தனது YOUTUBE தளத்தில் முழுமையாக பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
மேலும் இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் மோடிக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
பேச்சுவார்த்தைகளின் நிறைவில் இருவராலும் கூட்டு ஊடக அறிவித்தலும் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
