நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்!
இந்தோனேசியாவில் இன்று காலை 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டின் வடக்கு சுமத்ராவில் காலை 8.28 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை,
மியான்மாரில் சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நில அதிர்வினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

