கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் இன்று(ஜூன் 28) அதிகாலை நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, மெக்னிடியூட் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அனர்த்தத்தினால் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், உயிரிழப்புகள், சேதங்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாக்கிஸ்தானில் கடந்த மதம் மட்டுமே 4.2ரிக்டர் மற்றும் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.