கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
வங்கக்கடலில் இன்று காலை நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை இல்லை.
வங்கக்கடலில் இன்று(வெப்ரவரி 25) காலை 6.10 மணியளவில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது 5.1ரிச்டர் அளவு கோலில் பதிவாகியுள்ளது.
மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 340 கிலோமீற்றர் தொலைவில் வங்கக்கடலில் 91 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.