Power World Gyms, Sri Lanka’s leading fitness brand with over 30 years of promoting healthier lifestyles, has partnered with Kings Hospital Colombo as its Official Wellness Partner. This collaboration brings together expertise in fitness and healthcare to introduce a dedicated wellness programme for the hospital’s staff, supporting their physical and mental well-being. Through this partnership,…
இன்றிலிருந்து மழை வீழ்ச்சி அதிகரிக்கலாம்..!
கிழக்கில் அலை வடிவிலான காற்றுப் பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக, இன்று செவ்வாய்கிழமையிலிருந்து நாட்டின் மழை நிலைமையில் ஓரளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிரதேசத்தின் கிழக்குச் சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் இடைக்கிடையே பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலைமை காணப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைத்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை கண்டி மாவட்டத்தில் உடுதும்பர, தொலுவ, மெததும்பர, கங்கா இஹல கோரள மற்றும் மினிப்பே பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் பதுளை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கும் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் குறித்த இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயற்கை அனர்த்தங்களால் 643 பேர் உயிரிழந்துள்ளதோடு, 183 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 459 726 குடும்பங்களைச் சேர்ந்த 1, 600, 469 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 22 050 குடும்பங்களைச் சேர்ந்த 71 472 பேர் தொடர்ந்தும் 739 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 6193 வீடுகள் முழுமையாகவும், 95 456 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Goexchange365 is my go-to for almost everything now! Great user experience. I’ve had pretty good results so far, definitely worth signing up! Find out more about this exchange now! goexchange365.
**mitolyn official**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.