இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC, நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில் முனைவோரின் நிதி அறிவுத்திறனை மேம்படுத்துவதறற்காக “திரியென் தியுனுவட்ட” நிதி அறிவுத்திறன் திட்டத்தின் அடுத்த கட்டத்தை அண்மையில் புத்தளம் நகரத்தில் நடைபெற்றது. HNB Finance நிறுவனத்தின் சமூக பொறுப்பு முயற்சியின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம், கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையானன பயிற்சி நிகழ்ச்சிகள் மூலம், HNB Finance நிறுவனம் ஏராளமான…
இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ள அரசாங்கத்தின் நிவாரண பொதிகள்

பண்டிகைக் காலத்தில் அரசாங்கத்தால் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களடங்கிய நிவாரணப் பொதிகளை இன்று முதல் பெற்றுக் கொள்ள முடியும்.
நாடு பூராகவுமுள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் COOPFED விற்பனை நிலையங்களினூடாக நிவாரணப் பொதியைப் பெற்றுக்கொள்ளலாம்.
5,000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்களடங்கிய நிவாரணப் பொதியை 2,500 ரூபாய்க்குக் கொள்வனவு செய்ய முடியும்.
இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த நிவாரணப் பொதியை கொள்வனவு செய்ய முடியும் என அரசாங்கம் அண்மையில் அறிவித்தது.