Colombo, 13 August 2026: The Indian Cultural Association (ICA) today announced the launch of the third edition of the ICA International Marathon, scheduled to take place on 13 December 2026 at Galle Face Green, Colombo. The event is set to bring together runners, fitness communities, corporate teams, and international participants for a certified road-running experience…
இலங்கைச் சுற்றுலாத்துறையில் புதிய மைல்கல்:City of Dreams Sri Lanka-வின் Nüwa ஹோட்டலுக்கு 5 நட்சத்திர அங்கீகாரம்
கொழும்பு, வெள்ளிக்கிழமை, 08 மே 2026: தெற்காசியாவின் முதலாவது முழுமையான ஒருங்கிணைந்த சொகுசு உல்லாச விடுதியான City of Dreams Sri Lanka-வின் கீழ் இயங்கும் அதன் முதன்மைச் சொகுசு ஹோட்டலான Nüwa, தமக்குக் கிடைத்துள்ள கௌரவமிக்க
5-நட்சத்திர (5-Star) அங்கீகாரத்தைக் கௌரவிக்கும் வகையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் கொண்டாட்ட நிகழ்வை நடத்தியது. பிராந்தியத்தின் முன்னைணி சொகுசு விருந்தோம்பல் இலக்குகளில் ஒன்றாக தனது நிலையை இந்த மைல்கல் சாதனை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
Nüwa-வில் உள்ள நேர்த்தியான Crystal Lounge-இல் நடைபெற்ற இந்த பிரத்தியேக மாலை நேர நிகழ்வில், இலங்கையின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் முக்கிய பிரமுகர்கள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் City of Dreams Sri Lanka-வின் சிரேஷ்ட தலைமைத்துவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். உலகளாவிய சொகுசுப் பயண வரைபடத்தில் இலங்கையின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் ஒரு தருணமாக இது அமைந்தது.
இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இவர்களது வருகையானது, தேசிய சுற்றுலாத் துறைக்கு Nüwa ஈட்டியுள்ள இந்தச் சாதனையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது.
City of Dreams Sri Lanka-வின் சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் சாமிகா கருணாரட்ன அவர்கள் நெறிப்படுத்திய ஊடகவியலாளர் சந்திப்புடன் இந்நிகழ்வு ஆரம்பமானது. இதில் இலங்கையின் மாறிவரும் சொகுசு விருந்தோம்பல் நிலப்பரப்பு மற்றும் கொழும்பை ஒரு உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக நிலைநிறுத்துவதில் ஒருங்கிணைந்த விடுதிகளின் பங்களிப்பு குறித்து தலைமைத்துவக் கருத்துக்கள் பகிரப்பட்டன. City of Dreams Sri Lanka-வின் சிரேஷ்ட தலைமைத்துவ அதிகாரிகளான மைக்கல் ஹபாஷி (பொது முகாமையாளர் – சொத்து) மற்றும் தக்ஷில கலப்பத்தி (ஹோட்டல் முகாமையாளர்) ஆகியோர் Nüwa-வின் பயணம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சொகுசு சேவையில் புதிய தரநிலைகளை அமைப்பதற்கான அதன் நோக்கு குறித்து தமது பார்வைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
City of Dreams Sri Lanka-வின் மணிமகுடமாகத் திகழும் Nüwa, விடுதியின் மேல் பகுதியில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட 113 அறைகள் மற்றும் சூட்களைக் (Suites) கொண்டுள்ளது. இது இணையற்ற தனியுரிமை, பிரத்தியேக சேவை மற்றும் கொழும்பின் வானலை மற்றும் இந்தியப் பெருங்கடலின் பரந்த காட்சிகளை வழங்குகிறது. பிரத்தியேக உணவு அனுபவங்கள், தனிப்பட்ட ஆரோக்கிய சேவைகள் முதல் உயர் ரக தனிப்பயனாக்கப்பட்ட பட்லர் சேவைகள் வரை, இலங்கையில் நவீன சொகுசு விருந்தோம்பலின் அர்த்தத்தை Nüwa மறுவரையறை செய்துள்ளது.
அன்றைய தினத்தின் மிகச் சிறப்பான நிகழ்வாக, உலகளவில் புகழ்பெற்ற 5-ஸ்டார் (5-Star) விருதை Nüwa ஹோட்டலுக்கு உத்தியோகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றுக்கொள்வதற்காக மேடையில் இணைந்த கௌரவ விருந்தினர்கள், ஹோட்டல் நிர்வாகத்தினர் மற்றும் துறைத் தலைவர்கள் அனைவரும் குழுவாகப் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய மைக்கேல் ஹபாஷி, “இந்த அங்கீகாரமானது Nüwa-விற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இலங்கையின் சொகுசு சுற்றுலாத் துறைக்கும் பெருமை சேர்க்கக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகும். நாட்டிற்கு வருகை தரும் ஆடம்பர சேவைகளை எதிர்பார்க்கும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து, இலங்கை சுற்றுலாத் துறையின் சிறப்பை உலகிற்கு எடுத்துக் காட்ட நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம். Nüwa என்பது வெறும் ஒரு சொகுசு தங்குமிடம் மட்டுமல்ல, அது உயர்தர வாழ்க்கை முறையை அனுபவிக்க வழிவகுக்கும் ஒரு தனித்துவமான இடமாகும்.” என்றார்.
Nüwa வர்த்தக நாமத்தின் கௌரவம் மற்றும் பெருமையை பறைசாற்றும் வகையில், நேரடி இசை நிகழ்ச்சிகளுடன் இந்த வெற்றியின் மகிழ்ச்சியை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அத்துடன் இந்த நிகழ்வு அழகான நடனக் கலைகளாலும் மெருகூட்டப்பட்டது. மேலும், வருகை தந்திருந்த அனைவரும் ஒரு ஆடம்பரமான உணவு விருந்தை (Buffet) அனுபவிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
பிராந்திய சுற்றுலாத் துறையில் புதிய பரிமாணங்களைத் திறந்து, நிகரற்ற சுற்றுலா அனுபவங்களை வழங்க அர்ப்பணிப்புடன் செயல்படும் City of Dreams Sri Lanka இன் ஆடம்பர சேவையான Nüwa பெற்றுக்கொண்ட இந்த விசேட அங்கீகாரம், கொழும்பு நகரை சர்வதேச தரத்திலான சுற்றுலா மையமாக உயர்த்துவதில் எடுக்கப்பட்ட ஒரு மாபெரும் நடவடிக்கையாகக் கருதலாம்.