Colombo, 13 August 2026: The Indian Cultural Association (ICA) today announced the launch of the third edition of the ICA International Marathon, scheduled to take place on 13 December 2026 at Galle Face Green, Colombo. The event is set to bring together runners, fitness communities, corporate teams, and international participants for a certified road-running experience…
இலங்கையின் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதில் மூன்று தசாப்த பயணத்தை கொண்டாடும் Technomedics
இலங்கையின் மிகவும் நம்பகமான மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான Technomedics, நாட்டின் சுகாதாரத் துறைக்கு ஆற்றி வரும் 30 ஆண்டுகால அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை கொண்டாடுகின்றது. உயிர்களை காப்பாற்றுதல், நோயாளிகளின் சிகிச்சை பெறுபேறுகளை மேம்படுத்துதல் மற்றும் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் அதன் நீண்டகால உறுதிப்பாட்டை இது மீண்டும் வலியுறுத்துகிறது. ஆரம்பத்தில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், காலப்போக்கில் இலங்கையின் அரச மற்றும் தனியார் சுகாதார நிறுவனங்களுக்கு ஒரு வலிமையான மற்றும் மதிப்புமிக்க பங்காளராக வளர்ந்துள்ளது. இன்று, இது வெறும் மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் ஒரு நிறுவனமாக மட்டுமல்லாமல், மருத்துவத் தரங்களை உயர்த்துவதிலும், எதிர்கால தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதிலும், மருத்துவ நிபுணர்களை வலுப்படுத்துவதிலும் ஒரு மூலோபாயப் பங்காளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று தசாப்தங்களாக, மருத்துவர்கள், விசேட நிபுணர்கள், தாதியர்கள், உயிரியல் மருத்துவக் குழுக்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் இணைந்து உள்ளூர் சுகாதார தேவைகளுக்கு ஏற்ற உலகத்தரம் வாய்ந்த மருத்துவத் தீர்வுகளை Technomedics நிறுவனம் வழங்கி வருகின்றது. சர்வதேச ரீதியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து, அதிநவீன மருத்துவப் புத்தாக்கங்களை அறிமுகப்படுத்துவதுடன், விரிவான தொழில்நுட்ப அறிவுப் பரிமாற்றம், பயிற்சிகள், விற்பனைக்குப் பிந்தைய சேவைகளையும் இது முன்னெடுத்து வருகின்றது.
மனிதநேயம் மற்றும் சமூகத்துடனான நன்மையளிக்கும் தாக்கம் ஆகியவற்றில் Technomedics எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சுகாதாரப் பிரிவினர், மக்களுக்கு சிறந்த சிகிச்சை பெறுபேறுகளை வழங்குவதை உறுதி செய்வதற்காக, பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவங்களை வழங்குவதில் நிறுவனம் பெருமளவு முதலீடு செய்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் அண்மைய பொருளாதார சவால்களின் போது, நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புக்கு ஒரு நம்பிக்கையான பங்காளராக நிறுவனம் தன்னை நிரூபித்திருந்தது. அத்துடன், தனது பிரதான மருத்துவ தொழில்முறை செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, ஏற்றுமதி சார்ந்த வர்த்தகங்கள் மற்றும் புதிய நிறுவனங்களின் கொள்வனவுகள், மூலோபாய ரீதியான ஏற்றுமதி சார்ந்த பல்வகைப்பட்ட வணிகங்கள் மூலமாகவும் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு Technomedics பங்களிப்பு செய்து வருகிறது.
இந்த மைல்கல் குறித்து, Technomedics International நிறுவனத்தின் ஸ்தாபகரும் குழும தலைவருமான சுஜித் சமரதிவாகர கருத்துத் தெரிவிக்கையில், “உயிர்களை வளப்படுத்துவதும் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குதல் எனும், எமது நோக்கம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாறாமல் நிலைத்துள்ளது. இலங்கை சுகாதார நிறுவனங்கள் மற்றும் வல்லுநர்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையை நாம் மனதார பாராட்டுகிறோம். வலுவான பங்காளித்துவங்கள், தொடர்ச்சியான கற்றுக் கொள்ளல் மற்றும் சமூகத்தின் மீதான பொறுப்புணர்வு ஆகியவையே எமது வெற்றிப் பாதைக்கு வழி வகுத்தன. எதிர்காலத்திலும் எமது பணியாளர்கள், புத்தாக்கங்கள் மற்றும் மருத்துவத் தரங்களை உயர்த்தும் தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் நாம் தொடர்ச்சியாக முதலீடு செய்வோம்” என்றார்.
இன்று, Technomedics International நிறுவனம் சர்வதேச நோக்குடன் கூடிய ஒரு வெற்றிகரமான இலங்கை நிறுவனமாகத் திகழ்கிறது. நெறிமுறை ரீதியான பண்புகள், நம்பகத்தன்மை, பெறுபேறுகளை மையமாகக் கொண்ட அணுகுமுறை ஆகியவற்றால் இது மதிக்கப்படுகிறது. நிறுவனத்தின் வரலாறு வெறுமனே ஆண்டுகளால் மட்டுமல்லாது, அது மாற்றியமைத்த மனித உயிர்கள், உருவாக்கிய தரநிலைகள் மற்றும் சுகாதாரத் துறையில் அது ஏற்படுத்திய பங்காளித்துவங்கள் மூலமாகவே அளவிடப்படுகிறது. Technomedics தனது எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில், புத்தாக்கங்கள், ஒத்துழைப்பு மற்றும் அனைவருக்கும் சிறந்த சிகிச்சை பராமரிப்பை வழங்குவது தொடர்பான அதன் பொதுவான நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவும், சுகாதாரப் பராமரிப்பில் இலங்கை செல்வாக்கு செலுத்தும் வகையிலும் நிறுவனம் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்படுமென உறுதியளிக்கிறது