உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று(வெப்ரவரி 16) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் உள்ள கட்சியின் பதில் தலைவர் C.V.K.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மத்திய குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது நீண்டகாலமாக கட்சியின் பொதுச்செயலாளரக கடமையாற்றிய வைத்தியர் சத்தியலிங்கம் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்ததை அடுத்து கட்சியின் துணைச்செயலாளராக கடமையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் இத்தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்படவில்லை என்பதனையும் பகிரங்கமாக ஊடகங்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் என்றவகையில் எம்.ஏ.சுமந்திரனே தெரிவித்தார்.