இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கான பரிசுத் தொகை அதிகரிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான பெண்ணை கைது செய்வதற்கு சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு 1.2 மில்லியன் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த நாளிலிருந்து அவர் இருக்கும் இடம் குறித்து சரியான தகவல்கள் எதுவும் இல்லாததால், சந்தேக நபரைக் கைது செய்வதற்கு சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு ரூ.1.2 மில்லியன் ரொக்கப் பரிசு வழங்க பொலிஸ் தலைமையகம் முடிவு செய்துள்ளது.