டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் நிலையை நெருங்கிவிட்டது

ஈரான் தனது சொந்த அணு ஆயுதங்களை உருவாக்கும் நிலையை நெருங்கிவிட்டதாக சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவர் ரஃபேல் மரியானோ க்ரோஸி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஈரான் அணுகுண்டை உருவாக்கும் பணியைத் தொடங்கவில்லை என்றும் அவர் கூறினார். ஈரானிடம் தற்போது அணு ஆயுதங்கள் இல்லை. ஆனால், அவர்கள் விரைவில் அதை சொந்தமாக்கிக் கொள்வார்கள்.
ஈரான் அணுகுண்டை உருவாக்க தேவையான அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டது. மேலும், உலக சமூகம் அவர்களின் யுரேனிய செறிவூட்டலை அமைதியான நோக்கங்களுக்காகப் பயன்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஈரானிடம் அணுகுண்டை உருவாக்குவதற்கான அனைத்து பாகங்களும் உள்ளன. ஒரு நாள் அவர்கள் அதையெல்லாம் கூட்டுவார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் அணுகுண்டை உருவாக்குவதில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் ஐ.நா. நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக க்ரோஸி ஈரானுக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அர்காச்சி மற்றும் ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் முகமது எஸ்லாமி ஆகியோரை அவர் சந்தித்தார்.
இதேவேளை, ஈரானின் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு எதிராக அமெரிக்கா குரல் கொடுத்தது வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.