நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஈரான் துறைமுகத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 400 பேர் காயம்
தெற்கு ஈரானின், பந்தர் அப்பாஸ் பகுதியிலுள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் இன்று (26) பாரிய வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 400ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் தனது அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் ஓமானில் மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அத்துடன் வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

