கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
உக்ரைன் உடனான போர்நிறுத்த திட்டத்தை நிராகரித்த ரஷ்யா
அமெரிக்காவின் போர்நிறுத்த திட்டத்தை ரஷ்யா நிராகரித்துள்ளதுடன், இது உக்ரைனுக்கு மாத்திரமே தற்காலிக ஓய்வு அளிக்கும் என தெரிவித்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான ஆலோசகர் யூரி உஷாகொவ் (Yuri Ushakov) இதனைத் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு ரஷ்யாவை ஒப்புக்கொள்ள வைப்பதற்கான முயற்சியாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வோல்ட்ஸ் நேற்றைய தினம் யூரி உஷாகோவுடன் நடத்திய தொலைபேசி கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.