டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
உப்பு விலையைக் குறைக்க உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை

நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் உப்பு உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் கடந்த 25 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
தொழில்துறை மற்றும் உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் உயர்தர உப்பை நியாயமான விலையில் சந்தையில் வெளியிடுவதற்குத் தேவையான ஒழுங்குமுறைகளைச் செய்வதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும்.
சந்தையில் விற்கப்படும் உப்பின் விலைகள் தொடர்பில் அதிகாரசபை முன்னெடுத்துவரும் கணக்கெடுப்பின் படி, கடந்த காலத்தில் பல்வேறு விலைகளில் உப்பு விற்பனை, பருவகால உப்பு பற்றாக்குறை மற்றும் தொழில்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.