நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கை
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஷ்டானங்கள் நடைபெறும் தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (20) சிறப்பு மத சேவைகள் நடைபெறும் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.
எனவே, பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு பொலிஸ் பாதுகாப்பை செயல்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியுள்ளார்.
இந்த காலகட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் தேவாலயங்களை அடையாளம் கண்டு, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அவர் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை (STF) மற்றும் முப்படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

