Cambridge University Press & Assessment hosted the Cambridge English Leadership Conference (CELC) 2026 in Colombo, bringing together principals, school leaders and English educators to discuss how schools can prepare learners for success in an increasingly AI-enabled world. The conference explored how learner-centred classrooms, effective assessment, data-driven feedback, and strong foundations in communication can help students…
உலகளாவிய பொழுதுபோக்கு வரைபடத்தில் கொழும்பிற்கு புதிய இடம்:City of Dreams Sri Lanka-வின் ஓராண்டு சாதனைப் பயணம்
கொழும்பு, 2026 ஜூலை 02: இலங்கையின் மாபெரும் ஒருங்கிணைந்த சொகுசு விடுதியான ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ (City of Dreams Sri Lanka) தனது முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. வெறும் ஒரு சொகுசு விடுதி என்ற எல்லையைத் தாண்டி, கடந்த ஓராண்டில் கொழும்பு நகரின் கலாசார மற்றும் பொழுதுபோக்கு அடையாளத்தையே சர்வதேச தரத்திற்கு மாற்றியமைத்த ஒரு முக்கிய சக்தியாக இது உருவெடுத்துள்ளது. சர்வதேச பொழுதுபோக்கு அம்சங்கள், கலாசார நிகழ்வுகள் மற்றும் ஆடம்பர அனுபவங்கள் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக வழங்கி, கொழும்பு நகருக்கு ஒரு புதிய அடையாளத்தை இது அளித்துள்ளது.
பாலிவுட் நட்சத்திரம் ஹிருத்திக் ரோஷனின் பங்கேற்புடன் நடைபெற்ற சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் பிரம்மாண்ட திறப்பு விழா, ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைந்தது மட்டுமன்றி, சர்வதேச தரம் வாய்ந்த பொழுதுபோக்குகளை இலங்கைக்குக் கொண்டு வரும் ஒரு மையமாக இது இருக்கும் என்பதையும் பறைசாற்றியது. கடந்த ஓராண்டு காலப்பகுதியில், இந்த தொலைநோக்குப்பார்வையானது மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலாக மாற்றப்பட்டு, உலகத்தரம் வாய்ந்த கலைஞர்கள், உள்நாட்டுப் படைப்பாளிகள் மற்றும் பிராந்தியத்தின் பல்வேறு பகுதி ரசிகர்களை ஈர்க்கும் வகையில் பல விசேட நிகழ்வுகள் இங்கு அரங்கேறியுள்ளன. இது கொழும்பின் கலாசார அந்தஸ்தை உலகளவில் உயர்த்த வழிவகுத்துள்ளது.
பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் மற்றும் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2023 ஸ்வேதா ஷர்தா ஆகியோர் பங்கேற்ற Signature Glam நிகழ்வைத் தொடர்ந்து, சுனில் ஷெட்டி மற்றும் நியா சர்மா ஆகியோர் பங்கேற்ற Signature Diwali Glitz நிகழ்வும் இங்கு மிக விமர்சையாக நடத்தப்பட்டது. இந்தியாவின் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு அதிகளவில் வருகை தரும் பின்னணியில், இத்தகைய தொடர்ச்சியான பாலிவுட் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் மூலம் மும்பை மற்றும் துபாய் போன்ற நகரங்களுக்கு இணையாக கொழும்பையும், குறிப்பாக ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவையும் ஒரு பிராந்திய பொழுதுபோக்கு மையமாக மாற்றி வருகின்றன.
இதேபோன்றதொரு தொலைநோக்குப்பார்வை இசை மற்றும் இரவு நேரக் கொண்டாட்டங்களுக்கும் நீடிக்கிறது. சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவில் நடைபெற்ற Viral Festival மூலம் Joe Lobel, SiangYoo, DCR Milda மற்றும் Papazxk போன்ற சர்வதேச மின்னணு இசைக் கலைஞர்கள் (International electronic artists) கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர். அத்துடன், Dreams & Beats நிகழ்வுக்காக சர்வதேச அளவில் புகழ்பெற்ற DJ Katch கொழும்புக்கு வருகை தந்து ரசிகர்களைக் குஷிப்படுத்தியதோடு பிராந்திய இசை ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஓராண்டில், சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா தனது நிகழ்ச்சி நிரலை இசை, கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறை எனப் பல்துறைகளிலும் விரிவுபடுத்தியுள்ளது. சர்வதேச அளவிலான முன்னணி DJ-க்கள் மற்றும் உள்ளூர் மின்னணு இசைக் கலைஞர்களை ஒன்றிணைத்து, இலங்கையை உலகளாவிய இசை விழா வரைபடத்தில் சேர்க்கும் இலக்குடன் வருடாந்தம் நடத்தப்படும் இலங்கையின் முதன்மையான வருடாந்த house music திருவிழாவான Serendisco இங்குதான் நடைபெறுகிறது. மேலும், Afro House மற்றும் progressive மின்னணு இசையை உள்ளடக்கிய Afro Safari இரவு நேரக் கொண்டாட்டமும், இந்தியப் பெருங்கடலின் அழகிய பின்னணியில் DJ Hamma வழங்கும் Urban Sunset நிகழ்வும் கொழும்பின் இரவுநேர பொழுதுபோக்கு கலாசாரத்திற்கு புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளன.
இதன் மிக முக்கிய தருணங்களில் ஒன்றாக, ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து லண்டனின் புகழ்பெற்ற West End உரிமம் பெற்ற La Bamba! என்ற இசை நாடகம் இங்கு அரங்கேற்றப்பட்டது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். புகழ்பெற்ற தயாரிப்பாளர் பால் மோரிசியின் (Paul Morrissey) இயக்கத்தில், திறந்த தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட இலங்கை கலைஞர்கள் சர்வதேச கலைஞர்களுடன் இணைந்து The Forum மேடையில் 7 காட்சிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இது சர்வதேச தரத்திலான தயாரிப்புகளை கொழும்பில் வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதையும், உள்ளூர் கலைஞர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகளை வழங்க முடியும் என்பதையும் நிரூபித்தது.
மேலும், சர்வதேச நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கும் (Stand-up comedy) சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவில் அரங்கேறின. இதில் நகைச்சுவை உலகின் முன்னணி நட்சத்திரமான Russell Peters தனது உலகளாவிய Relax World Tour நிகழ்ச்சியை இங்கு முழுமையாக விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகளுடன் நடத்தினார். இதன் மூலம் உலக வரைபடத்தில் உள்ள முக்கிய நகரங்களின் வரிசையில் கொழும்பும் இணைந்தது. இது தவிர, White Party, Cinco de Mayo கொண்டாட்டங்கள் மற்றும் Tamil Jazz Collective குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் எனப் பிரம்மாண்டமான இரவு நேர நிகழ்வுகள் முதல் பிராந்திய கலை அடையாளத்தை வெளிப்படுத்தும் நெருக்கமான நேரலை நிகழ்ச்சிகள் வரை பலதரப்பட்ட பொழுது போக்குகள் எனப் பலதரப்பட்ட கலை வடிவங்களுக்கு சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா தடையற்ற மேடையை அமைத்துக் கொடுத்துள்ளது.
சர்வதேச அளவிலான வரவேற்பைப் போன்றே, உள்ளூர் சமூகங்களுடனான தொடர்பும் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் கலாசார செல்வாக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிங்கள, தமிழ் புத்தாண்டு (அவுருது), சீனப் புத்தாண்டு மற்றும் ஹோலி பண்டிகைகள் போன்ற பாரம்பரிய விழாக்கள் நவீன முறையில் இங்கு கொண்டாடப்பட்டு, கொழும்பு மக்களின் சமூக நாட்காட்டியில் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாக மாறியுள்ளன. அத்துடன், Colombo Fashion Week உடனான தொடர்ச்சியான கூட்டாண்மை, Fashion மற்றும் ஆடை வடிவமைப்புத் துறையின் மையமாகவும் இதனை நிலைநிறுத்தியுள்ளது.
ஒவ்வொரு நிகழ்வும் ஒரு தனித்துவமான கதையைக் கூறினாலும், ஒட்டுமொத்தமாக அவை ஒரு பெரிய மாற்றத்தைக் காட்டுகின்றன. கடந்த ஓராண்டில், ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ வெறும் பிரபலங்களை வரவழைக்கும் இடமாக மட்டுமில்லாமல், சர்வதேச பொழுதுபோக்கு, கலாசாரக் கொண்டாட்டங்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான அனுபவங்கள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் சங்கமிக்கும் ஒரு நிரந்தர மையமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
எனவே, ஓராண்டு நிறைவில், இந்த மாற்றம் என்பது வெறும் ஒரு சொகுசு விடுதியின் திறப்போடு மட்டும் நின்றுவிடவில்லை. மாறாக, சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா என்பது சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற கலைஞர்கள், பிராந்திய ரசிகர்கள் மற்றும் இலங்கை திறமையாளர்கள் ஒன்றிணையும் ஒரு இடமாக மாறியுள்ளதுடன், பொழுதுபோக்கு, கலாசாரம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த நிகழ்வுகளுக்கான தெற்காசியாவின் முன்னணி நகரங்களில் ஒன்றாக கொழும்பு உருவெடுப்பதையும் இது மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.