நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல்.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் நடவடிக்கை நேற்று (மார்ச் 17) முதல் ஆரம்பமாகிவுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல் வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதனிடையே, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்குக் கடந்த 3 ஆம் திகதி முதல் வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் 19 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளது.
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை வேட்பாளர்கள் கட்சி சார்பாக ஆர்வத்தோடு தாக்கல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

