டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினரின் தீர்மானம்

அனைத்து எரிபொருள் விநியோகஸ்தர்களும் மீண்டும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி, எரிபொருள் ஓர்டர்களைப் பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்தார்.
இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அரசாங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பதாகவும் அதேபோல், நாளை (04) பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவருடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும், அந்த கலந்துரையாடலுக்கு பின்னர் இது தொடர்பாக தமது சங்க உறுப்பினர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.