நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய துணைத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய துணைத் தலைவராக நவீன் திசாநாயக்க நேற்று (வெப்ரவரி 14) நடைபெற்ற கட்சி செயற்குழு கூட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நவீன் திசாநாயக்க முன்னர் விளையாட்டு, சுற்றுலா மற்றும் பெருந்தோட்டத் தொழில் அமைச்சராகவும், சப்ரகமுவ மாகாண சபையின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.