பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 293 ரூபாவாகும். 361 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 341 ரூபாவாகும். இதேவேளை…
ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் சிலர் கைது

கண்டியில் உள்ள பாதஹேவாஹெட்ட தொகுதியில் ஐக்கிய மக்கற் சக்தி வேட்பாளர்களை ஆதரித்து வாகன பேரணியில் பங்கேற்கத் தயாராக இருந்த 33 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பிட்டிய பகுதியில் இந்நடவடிக்கைக்காக தயார் நிலையில் வைத்திருந்த 8 வாகனங்களையும் கண்டி தலைமையக பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வேட்பாளர்களின் உருவப்படங்கள் மற்றும் பல்வேறு கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தற்போது அவை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்