ஐசிசி செம்பியன்சிப் 2025 இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி

ஐசிசி செம்பியன்சிப் 2025 இன் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் நியூஸ்லாந்து அணியை வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

துபாய் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற ஐசிசி செம்பியன்சிப் 2025 இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸ்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 16 உதிரிகள் அடங்கலாக 251 ஓட்டங்களை பெற்றுகொண்டது.

நிஸ்லாந்து அணி சார்பாக அதிகபட்சமாக தரில் மிட்செல் 63 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இந்திய அணி சார்பாக வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கட்டுகளையும் மொஹமட் ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 252 என்கின்ற வெற்றியிலைக்கை நோக்கி அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்தது.

அணித்தலைவர் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 76 ஓட்டங்களையும், அடுத்ததாக சிரேயாஸ் ஐயர் 48 ஓட்டங்களையும், ஏனைய வீரர்கள் தங்கள் கணிசமான ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க இறுதியாக ஜடேஜா அடித்த நான்கு ஓட்டங்களில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

இந்திய அணிக்கு எமது வாழ்த்துகள், மேலும் வழக்கம் போல போராடி இறுதிப்போட்டியை அலங்கரித்து வெற்றியை நூலளவில் தவறவிட்ட நியூஸ்லாந்து அணிக்கும் எமது வாழ்த்துகள்.

பும்ரா இல்லாமல் இந்திய அணி வேற்றுப்பெற்றது என்பது மேலதிக குறிப்பு.

போட்டியின் ஆட்டநாயகன் – Player Of The Match – India Rohit Sharma
தொடரின் ஆட்டநாயகன் – Player Of The Series – New Zealand Rachin Ravindra

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *