உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
ஐஸ்போதைப்பொருளுடன் மிரிஹான பகுதியில் ஒருவர் கைது.

மிரிஹான பொலிஸ் பிரிவின் பிடகோட்டே சந்தியில் நேற்று (மார்ச் 10) 10g 250mg ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு நடத்திய சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.