துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை முயற்சி செய்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி மாலை, கொஸ்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றால், லேலிஹெத்துவ சந்திக்கு அருகில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து 6 கிராம் 826 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர், 28 வயதுடைய ஊரகஸ்மன்ஹந்திய பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். மேலதிக விசாரணைகளில், கடந்த ஏப்ரல் 17…
ஐ.பி.எல் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம்! சாதனை படைத்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் 14 வயது துடுப்பாட்ட வீரர் வைபவ் சூரியவன்ஷி மிக இளம் வயதில் 20 இற்கு 20 போட்டியொன்றில் சதத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
அத்துடன் ஐ.பி.எல். வரலாற்றில் இரண்டாவது மிக வேகமான சதத்தைப் பூர்த்தி செய்தவர் என்ற சாதனையையும் அவர் பதிவு செய்துள்ளார்.
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றது.
அணி சார்பில் சுப்மன் கில் அதிகபட்சமாக 84 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 210 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 212 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக அதிகபட்சமாக 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த வைபவ் சூர்யவன்ஷி இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
அவர் 35 பந்துகளுக்கு முகம் கொடுத்து, 7 நான்கு ஓட்டங்கள் மற்றும் 11 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 101 ஓட்டங்களைப் பெற்றார்.
கடந்த மாதம் 14 வயதைப் பூர்த்தி செய்த சூரியவன்ஷி, ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் மிக இளவயது வீரராக இருப்பதுடன், அவர் முகம் கொடுத்த முதலாவது போட்டியின் முதல் பந்திலேயே ஆறு ஓட்டத்தை அடித்து கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.